இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) அறிவிக்கப்பட்டுள்ள 1,286 சாரதி மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான SLTB Vacancies 2026 முழு விவரங்கள், கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய பதிவு.
இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) காலியாக உள்ள 1,286 ஒப்பந்த அடிப்படையிலான சாரதி மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் உள்ள இந்த காலிப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1. SLTB Vacancies 2026 – காலிப்பணியிட விவரங்கள்
** சாரதி (Driver) பதவிகள்: 1,037 காலியிடங்கள்
** நடத்துனர் (Conductor) பதவிகள்: 249 காலியிடங்கள்
** மொத்த பணியிடங்கள்: 1,286 இடங்கள்
** வேலைவாய்ப்பு வகை: ஒப்பந்த அடிப்படை (Contract Basis)
2. கல்வி மற்றும் இதர தகுதிகள்
சாரதி பதவிக்கான தகுதிகள்:
** கல்வித் தகுதி: G.C.E. (O/L) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மிகாமல் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
** வயது எல்லை: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
** உரிமம்: குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle Driving Licence) வைத்திருக்க வேண்டும்.
** உடல் தகுதி: குறைந்தபட்ச எடை 45 கிலோ மற்றும் உயரம் 5 அடி 3 அங்குலம் இருக்க வேண்டும்.
நடத்துனர் பதவிக்கான தகுதிகள்:
** கல்வித் தகுதி: G.C.E. (O/L) பரீட்சையில் கணிதம் மற்றும் தாய்மொழி உட்பட 2 Credit Passகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
** வயது எல்லை: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
** உடல் தகுதி: குறைந்தபட்ச எடை 41 கிலோ மற்றும் உயரம் 5 அடி இருக்க வேண்டும்.
3. சம்பளம் மற்றும் சலுகைகள்
** மாதாந்திர அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவு:
- சாரதி: ரூ. 40,834/-
- நடத்துனர்: ரூ. 40,008/-
** அதிகப்படியான சலுகைகள்: வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு (Rs. 17,800/-), மேலதிக நேரக் கொடுப்பனவு (Overtime) மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். மேலும் EPF மற்றும் ETF சலுகைகளும் உண்டு.
4. விண்ணப்பிக்கும் முறை மற்றும் இறுதித் திகதி
** விண்ணப்பிக்க இறுதித் திகதி: 07.09.2026
** அனுப்பும் முறை: தகுதியானவர்கள் உத்தியோகப்பூர்வ தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து பதிவுத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
** உறையின் மேல் இடது மூலையில் கோர, “அப்பிக்கப்பட்ட பதவி மற்றும் பிரதேசம்” தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
** முகவரி: தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கை போக்குவரத்து சபை, எண் 200, கிருலா வீதி, நாரஹேன்பிட்டா, கொழும்பு 05.
SLTB Vacancies 2026 – முக்கியமான இணைப்புகள் (Links):
** அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பெற: SLTB Official Notice & Application Link
** கூடுதல் விபரங்களுக்கு: TamilGuru SLTB Vacancies 2026


















