📢 வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் தடுப்பூசி ஏற்றுநர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவித்தல்! 💉🏥
வடமாகாண சுகாதார அமைச்சில் காலியாக உள்ள 08 தடுப்பூசி ஏற்றுநர் (தரம் III) இடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
✅ முக்கிய விபரங்கள்:
பதவி: தடுப்பூசி ஏற்றுநர் (தரம் III)
சம்பளத் திட்டம்: MN 1 – 2025: ரூபா 45,230 – 78,360/-
வயது எல்லை: 18 – 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
பால்: ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.07.28
🎓 கல்வித் தகைமைகள்:
க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் தமிழ்/சிங்கள மொழியுடன் கணிதம் உட்பட 04 பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.
மற்றும் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் குறைந்தது 01 பாடத்தில் சித்தி பெற்றிருத்தல். (பொதுப் பரீட்சை தவிர்த்து)
📍 விண்ணப்பிக்கும் முறை:
வர்த்தமானி அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்களை
www.np.gov.lk
என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
“செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம்,
இல. 393/48,
கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்”
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
உறையின் இடது பக்க மேல் மூலையில் “NP/07/10/01/233” எனக் குறிப்பிடவும்
பரீட்சைக் கட்டணம் ரூபா 500/- ஐ பிரதேச செயலகத்தில் செலுத்தி பற்றுச்சீட்டை இணைக்கவும்
📝 பரீட்சை முறை:
நுண்ணறிவுப் பரீட்சை மற்றும் மொழித்திறன் & பொது அறிவு குறித்த இரண்டு வினாத்தாள்களைக் கொண்ட எழுத்துப் பரீட்சை நடைபெறும்
ஒவ்வொரு வினாத்தாளிலும் குறைந்தது 40% புள்ளிகளைப் பெற வேண்டும்
📞 மேலதிக விபரங்களுக்கு: 021 221 9939
🌐 விபரங்களுக்கு: www.np.gov.lk
தகுதியுள்ள அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்! வெற்றி பெற வாழ்த்துக்கள்! ✨💼
மற்றவர்கள் பயனடைய இதனை Share செய்யுங்கள்.










